TNPSC Thervupettagam

திவ்யாஸ்திரம் திட்டம்

March 14 , 2024 256 days 339 0
  • இந்தியா தனது ‘திவ்யாஸ்த்ரம் திட்டத்தின்’ ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் பறத்தல் சோதனையை நடத்தியது.
  • இந்த ஆயுதம் ஆனது பல்முனை இலக்கினை தன்னிச்சையாக தாக்கி விட்டு மீண்டும் திரும்ப வரும் (MIRV) தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.
  • இந்தத் தொழில்நுட்பமானது பல ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளின் மீது துல்லியமாக நிர்ணயிப்பதில் சிறந்த செயல்திறனை வழங்குகிறது.
  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5,000 கி.மீ. தொலைவிலான தாக்குதல் வரம்புடைய அக்னி-5 அணு ஆயுத ஏவுகணையின் முதல் சோதனை இதுவாகும்.
  • தற்போது, அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை கொண்ட நாடுகள் ஆகும்.
  • ஐதராபாத்தில் உள்ள நாட்டின் ஏவுகணை வளாகத்தைச் சேர்ந்த பெண் அறிவியலாளர் ஷீனா இராணி இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
  • அவரது கணவர், PSRS சாஸ்திரி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் ஏவுகணை சார்ந்த பணிகளில் ஈடுப்பட்டுள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டில் இஸ்ரோவினால் விண்ணில் ஏவப்பட்ட கௌடில்யா செயற்கைக்கோள் திட்டத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்