தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி விரிவான கொள்கையைக் கொண்ட இந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது.
இந்தக் கொள்கையில் காப்பீடு, வீட்டுவசதி, மறுவாழ்வு, வேலைவாய்ப்பு மற்றும் தீக் காயத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட இன்ன பிற நலன்புரி நடவடிக்கைகள் அடங்கும்.
தீக்காயம் என்பது முதன்மையாக தீயினால் ஏற்படும் தோல் அல்லது பிற உறுப்புத் திசுக்களில் ஏற்படும் காயம் ஆகும்.
புற ஊதா கதிர்வீச்சு, கதிரியக்கத் தன்மை, மின்சாரம் அல்லது சில இரசாயனங்கள் காரணமாக ஏற்படும் தோல் காயங்கள், அத்துடன் கரும் புகையை உள்ளிழுப்பதால் ஏற்படும் சுவாச பாதிப்பு ஆகியவையும் தீக்காயங்களாகக் கருதப்படுகின்றன.