TNPSC Thervupettagam

தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரியைக் கண்டறிதல் (Bug Snifer)

May 6 , 2020 1667 days 718 0
  • புனேவில் உள்ள அகார்கர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விரைவாக பாக்டீரயாவைக் கண்டறிவதற்காக திறன்மிக்க மற்றும் விலை குறைந்த உணர்வியான “Bug Snifer” என்ற கருவியை வடிவமைத்துள்ளது.
  • இது 30 நிமிடத்திற்குள் 1 மில்லி லிட்டரில் 10 செல்களைக் கண்டறியும் வரம்புடன் நுண்ணுயிரிகளைக் கண்டறியும் திறன் கொண்டது. 
  • நோய் ஏற்படுத்தும் பொதுவான பாக்டீரியாக்கள் எஸ்செரிச்சியா கோலி மற்றும் சாலமோனெல்லா தைபீமூரியம் ஆகியவையாகும்.
  • Bug Snifer என்பது பாக்டீரியாவின் இருப்பைக் கண்டறிவதற்காக செயற்கை பெப்டைடுகள், காந்தத் தன்மை கொண்ட நானோ துகள்கள், குவாண்டம் புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஒரு உயிரி உணர்வியாகும்.
  • ARI (Agharkar Research Institute) என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு தனிச் சுதந்திர அமைப்பாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்