தபால் துறையானது தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற தபால்தலைச் சேகரிப்பு உதவித் தொகை திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பு தொடர்பான ஆர்வத்தினை உருவாக்குவதற்காக அஞ்சல் தலைகள் குறித்த திறனறிதல் மற்றும் ஆராய்ச்சியை ஒரு பொழுதுபோக்காக மேற்கொள்வதற்கு ஊக்குவிக்க உதவும்.
இது கல்வி சார்ந்தப் பதிவுகள் சிறந்து விளங்கும் மற்றும் தபால்தலை சேகரிப்பை ஒரு பொழுதுபோக்காகவும் கொண்டுள்ள 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறந்த மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்குகிறது.
இதில் மாதாந்திர உதவித் தொகையானது 500 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 6000 ரூபாயாக வழங்கப் படும் என்பதோடு இது காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படும்.