SPARSH – Scholarship for promotion of Aptitude & Research in Stamps as a Hobby
அஞ்சல் தலைகளில் ஆராய்ச்சி மற்றும் திறனறிவுப் பகுப்பாய்வை மேற்கொள்ளுதலை ஓர் விருப்பப் பொழுதுப் போக்காக ஊக்குவிக்க அளிக்கப்படும் உதவித் தொகை.
பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்காக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தால் வழங்கப்படும் ஓர் அகில இந்திய பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டமே தீன்தயாள் ஸ்பார்ஷ் (SPARSH) யோஜனாவாகும்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான நல்ல கல்வித் தேர்ச்சிப் பதிவுகளும், அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கமும் உடைய மாணவர்கள் மண்டல தபால் அலுவலங்களில் நடத்தப்படும் போட்டித் தேர்வு செய்முறைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவித் தொகை வழங்கப்படும்.
இத்தகு உதவித் தொகையைப் பெற, அம்மாணவர் இந்தியாவிற்குள் உள்ள ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் மாணவராகவும், சம்பந்தப்பட்ட அப்பள்ளி ஓர் அஞ்சற்தலை சேகரிப்பு குழுவை (கிளப்) கொண்டதாகவும், அக்குழுவில் அம்மாணவர் உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.