TNPSC Thervupettagam

தீன் மூர்த்தி சௌக்

January 15 , 2018 2508 days 837 0
  • தீன் மூர்த்தி சவுக்கை தீன் மூர்த்தி ஹைஃபா சவுக் என்று மறுபெயரிடும் முறையை குறிப்பிட ஒரு மங்கல நிகழ்ச்சி புது தில்லியின் தீன் மூர்த்தி நினைவரங்கில் நடத்தப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கலந்து கொண்டனர்.

தீன் மூர்த்தி நினைவரங்கம் பற்றி

  • தீன் மூர்த்தி நினைவரங்கில் உள்ள மூன்று வெண்கலச் சிலைகள் 15வது இம்பீரியல் குதிரைப் படைப்பிரிவைச் சேர்ந்த ஹைதராபாத், ஜோத்பூர் மற்றும் மைசூர் குதிரைப்படை வீரர்களை பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளன.
  • இந்த படைப்பிரிவு, முதல் உலகப் போரின் போது,  ஒட்டமான்,  ஜெர்மனி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரி ஆகிய கூட்டுப் படைகளால் பாதுகாக்கப்பட்ட ஹைஃபா நகரத்தின் மீது 1918ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி ஒரு வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டது.
  • நேச நாடுகளுக்கு கடல் மார்க்கமாக விநியோக பாதையை இந்த நகரத்திற்கு ஏற்படுத்திட ஹைஃபாவை விடுவித்தல் தெளிவாக்கியது.
  • முதல் உலகப் போரில் இந்த நகரத்தை விடுவிக்கும் போது நாற்பத்தி நான்கு இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
  • தற்போது வரை 61வது குதிரைப்பிரிவு செப்டம்பர் 23ம் தினத்தை எழுச்சி தினம் அல்லது ஹைஃபா தினம் என்று அனுசரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்