TNPSC Thervupettagam

தீபாவளிப் பண்டிகையின் போது மோசமடைந்த காற்று மாசுபாட்டு அளவு

October 19 , 2017 2465 days 833 0
  • சென்னையின் காற்று மாசுபாட்டின் அளவு 302 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இது டெல்லியின் காற்று மாசுபாட்டு அளவை (319) விட சற்றே குறைவு ஆகும். டெல்லி மாநகரில் பொதுவாக தீபாவளி பண்டிகைக் காலங்களில் பனிப்புகை மற்றும் காற்று மாசுபாடு அதிகமாக இருப்பது வழக்கமாகும்.
  • மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபடி, இந்தபருவத்தில் சென்னையின் பனிப்புகை மற்றும் மாசுபாட்டின் தரநிலை உயர்ந்த நச்சு எல்லையை (Higher Toxic level) தொட்டுள்ளது.
  • சென்னையின் காற்றின் தரமானது "திருப்திகரமான" நிலையிலிருந்து அக்டோபர் 16 அன்று “மோசம்” மற்றும் “மிகவும் மோசம்” என்ற நிலைக்கு தகுதி இறக்கம் செய்யப்பட்டுள்ளது.
காற்று தர குறியீடு
  • காற்று தர குறியீடு 6 தர வகைப்பாடுகள் மற்றும் வண்ண குறியீட்டின் மூலம் நாட்டின் காற்று மாசுபாட்டின் தரத்தை அளவிடும் குறியீடாகும்.
  • இக்குறியீடானது நாட்டின் காற்று தரத்தை மதிப்பிட CPCB (Central pollution Control Board) ஆல் பயன்படுத்தப்படுகிறது.
  • 8 முக்கிய மாசுகள் AQI இல் (Air Quality Index) கணக்கிடப்படும் அவையாவன: (PM10, PM 2.5, NO2, SO2, CO, O3, NH3, Pb)
  • AQIன் 6 தர நிலைகள் - நன்று, திருப்திகரம், மோசம், மிக மோசம், கடுமை, மிதமான மாசுபாடு.
  • புகழ் பெற்ற மருத்துவ இதழான லான்செட்டின் புதிய ஆய்வின் படி 2015 ல் மாசுபாடுகள் சார்ந்த இறப்புகள் உடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 2015 ல் காற்று நீர், மற்றும் பிற மாசுபாடுகள் காரணமாக 2.5 மில்லியன் மக்கள் முன்கூட்டியே மரணத்தை எய்தியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்