பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது பேருந்துகளில் தீயைக் கண்டறிதல் மற்றும் தீயை அணைக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளது.
30 விநாடிகளுக்குள் பேருந்துகளில் ஏற்படும் தீயை இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு கண்டறிய முடியும்.
மேலும், இதனால் 60 விநாடிகளில் தீயை அணைக்க முடியும்.
டெல்லியை மையமாகக் கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தீ வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மையத்தினால் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப் பட்டுள்ளது.