TNPSC Thervupettagam
April 4 , 2020 1604 days 492 0
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றமானது அமைதி காப்புப் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக “தீர்மானம் 2518” என்ற ஒன்றை ஏற்றுக் கொண்டது.
  • அமைதிப் படையினரின் பாதுகாப்பிற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த தீர்மானம் சீனாவால் முன்னெடுக்கப் பட்டது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது 75வது நினைவு ஆண்டைக் கொண்டாடும் சமயத்தில் அமைதிப் படையினரின் பாதுகாப்பிற்கான ஒரு தீர்மானமானது நிறைவேற்றப் படுகின்றது.
  • அமைதிக்கான நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்காக இந்த அமைப்பிற்கான ஒரு முக்கியமான ஆண்டு இந்த ஆண்டாகும்.
  • “அமைதிக்கான நடவடிக்கை” என்ற முன்னெடுப்பானது அரசியல் பிரச்சினைகள், நீண்ட காலப் பிரச்சினைகள், ஆபத்துள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகள், விரிவான மற்றும் சிக்கலான நடவடிக்கைகள் போன்ற பிரச்சினைகளைக் களைவதற்கு வேண்டி உறுப்பு நாடுகளுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகளினால் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்