மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமர்தீப் சிங் பாட்டியா தீவிர மோசடிகளுக்கான புலனாய்வு அலுவலகத்தின் (Serios Fraud Investigation Office – SFIO) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
SFIO
டெல்லியில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள இந்த அலுவலகம் மத்திய பெரு நிறுவன விவகார அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) கீழ், மோசடி விவகாரங்களில் புலனாய்வுகளை மேற்கொள்ளும் ஓர் நிறுவனமாகும்.
நாட்டின் முக்கிய மோசடி விசாரணைகளில் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த அலுவலகம் மத்திய வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வு துறையின் விசாரணை நடவடிக்கைகளுக்கும் துணைபுரியும் ஒருங்கிணைப்பு நிறுவனமாகும்.
பெருநிறுவன ஆளுகை (Corporate Governance) மீதான நரேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் 2003 இல் இந்த அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.