TNPSC Thervupettagam

தீவிர வெப்பக்காற்று

May 7 , 2022 807 days 388 0
  • அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேலும், இயல்பை விட குறைந்த பட்சமாக 4.5 புள்ளிகள் அதிகமாக இருக்கும் போதும் வெப்பக்காற்று வீசுவதாக அறிவிக்கப் படுகிறது.
  • கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் வடமேற்கு இந்தியாவில் ஏப்ரல் மாதம் அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
  • பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தின் பெரும் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை அதிகரித்ததால், வழக்கத்திற்கு மாறாக மிக வெப்பமான ஏப்ரல் மாதமாகவும் இது மாறியுள்ளது.
  • ஏப்ரல் 27 ஆம் தேதி வரை சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ் ஆகும்.
  • இது  கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த மாதத்தில் பதிவாகாத அதிகபட்ச வெப்ப நிலை கும்.
  • முழு அளவில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலைகளின் அடிப்படையில், ஒரு புவிப் பரப்பில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் போது வெப்பக் காற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் படுகிறது.
  • அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரியைத் தாண்டினால் கடுமையான வெப்பக்காற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்