தீவிரவாத குழுக்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள்
September 24 , 2018 2259 days 721 0
அமெரிக்காவின் உள்துறையானது தீவிரவாத குழுக்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.
தொடர்ந்து இரண்டாவது வருடமாக உலகம் முழுவதும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளையடுத்து மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருக்கின்றது.
2015-ம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் உலகின் மூன்றாவது மோசமாக பாதிப்படைந்த நாடாக இருந்தது.
இஸ்லாமிய அரசு, தாலிபன் மற்றும் அல் - சஹ்பாப் ஆகிய மிக பயங்கரமான தீவிரவாத குழுக்களுக்கு அடுத்த இடத்தில் நான்காவதாக இடம் பெற்றிருப்பது இந்தியாவின் மொத்த தீவிரவாதத் தாக்குதல்களில் 53 சதவிகிதத்தை மேற்கொள்ளும் சிபிஐ - மாவோயிஸ்ட்கள் (CPI-Maoists) ஆவர்.
குறிப்பாக, மேற்கு வங்க மாநிலம் முதல்முறையாக தீவிரவாதத் தாக்குதல்களில் 2016 ஆம் ஆண்டில் 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 2017-ம் ஆண்டில் 70 என்ற எண்ணிக்கைக்கு ஏறக்குறைய 215 சதவிகிதம் என்ற அளவில் அதிகரிக்கக் கண்டது.
சென்ற வருடம் கூர்க்கா விடுதலை ராணுவத்தாலும் மற்றும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஆகிய அமைப்பாலும் ஏற்பட்ட டார்ஜிலிங் அமைதியின்மையே பெரும்பாலும் இதற்கு காரணமாகும்.