TNPSC Thervupettagam

தீவிரவாத நிதித்தடுப்பு மசோதா - ஈரான்

October 14 , 2018 2139 days 612 0
  • ஈரானின் பாராளுமன்றம் தீவிரவாதத்திற்கான நிதியைத் தடுப்பதற்கான மசோதா ஒன்றை அங்கீகரித்துள்ளது.
  • இது பழமைவாதிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட போதிலும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுடனான அணு ஒப்பந்தத்தை உறுதி செய்வதில் முக்கியப் பங்காகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இம்மசோதாவின் நோக்கம் சர்வதேச தரங்களுடன் ஒப்பிட்டு அதனோடு ஒத்துப் போகும் வகையில் ஈரானின் சட்டங்களை ஏற்படுத்துவதும், ஐக்கிய நாடுகள் தீவிரவாத நிதி ஒப்பந்தத்தில் ஈரானை சேர்ப்பதற்கு வழிவகை செய்வதும் ஆகும்.
  • ஈரானின் அரசால் முன்மொழியப்பட்ட இந்த மசோதா, சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (Financial Action Task Force - FATF) நிபந்தனைகளை சந்திக்கும் விதத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்