TNPSC Thervupettagam

தீவுகள் பாதுகாப்பு மண்டலம் 2019 - அறிவிக்கை

March 28 , 2019 2071 days 714 0
  • மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது அந்தமான் நிகோபார் தீவுகளுக்காக தீவுகள் பாதுகாப்பு மண்டலம் 2019 (IPZ - Island Protection Zone) என்ற அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தீவுகள் பாதுகாப்பு மண்டல விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்களானது தீவுகளின் முழுமையான வளர்ச்சிக்கான நிதி ஆயோக்கின் பரிந்துரைகளுடன் ஒன்றிப் பொருந்துகிறது.
  • இது இதரத் தீவுகளுக்கான கடல்சார் ஒழுங்கு முறை மண்டலம் 2018-ன் விதிகளுக்கு இணையாக அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கான விதிகளைக் கொண்டு வருகிறது.
தீவுப் பாதுகாப்பு மண்டலம் 2019-ன் சிறப்பம்சங்கள்
  • இது பார்டாங், ஹேவ்லாக் மற்றும் கார் நிக்கோபர் போன்ற சிறிய தீவுகளில் உயர் அலைகளின் வரிசைகளிலிருந்து (HTL - high tide line) 20 மீட்டர்கள் வரை சுற்றுச் சூழல்சார் சுற்றுலாத் திட்டங்களை அனுமதிக்கிறது.
  • இதுவே பெரிய தீவுகளாக இருப்பின் HTL-ல் இருந்து 50 மீட்டர்கள் வரை சுற்றுச் சூழல்சார் சுற்றுலாத் திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
  • இது தீவுகள் கடல்சார் ஒழுங்குமுறை மண்டலம் 1A-ல் (ICRZ - island coastal regulation zone) ஈரநிலத்தில் நடை பயணம், மரக் குடிசைகள் மற்றும் இயற்கைச் சுவடுகள் போன்ற சுற்றுச்சூழல்சார் சுற்றுலாவை அனுமதிக்கிறது.
    • ICRZ 2018 : ICRZ 1A ஆனது ஆமைகள் காணப்படும் பகுதி, சதுப்பு நிலப் பகுதி மற்றும் பவளப் பாறைகள் போன்ற தீவுகளின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பகுதிகளை வகைப்படுத்த வழிமுறைகளை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்