TNPSC Thervupettagam

தீஸ்தா-3 அணை புனரமைப்பு

February 9 , 2025 14 days 72 0
  • சிக்கிமில் உள்ள டீஸ்டா-3 நீர்மின் நிலையத்தினை புனரமைப்பதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • முதலில் அமைக்கப்பட்ட 1,200 மெகாவாட் திறன் கொண்ட தீஸ்தா-III சுங்தாங் நீர்மின் உற்பத்தி அணை ஆனது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 03 மற்றும் 04 ஆம் தேதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அழிக்கப்பட்டது.
  • தெற்கு லோனாக் ஏரியிலிருந்து உருவாகிய பனிப்பாறை ஏரி உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் (GLOF) தூண்டப்பட்ட வெள்ளம் ஆனது, கற்காரைகளால் ஆன 60 மீட்டர் உயர அணையை அடித்துச் சென்றது.
  • புதிய கட்டமைப்பானது 118.64 மீட்டர் உயர கற்காரைகளால் ஆன ஈர்ப்பு விசை சார்ந்த அணையாக புனரமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்