TNPSC Thervupettagam

துங்கபத்ரா - நீர்நாய் பாதுகாப்பு காப்பகம்

February 27 , 2018 2334 days 821 0
  • பல்லாரி மாவட்டத்தில் முத்லாபூர் கிராமம் முதல் காம்பிளி வரை 39 கி.மீ தூரத்திற்கு துங்கபத்ரா நதி நெடுகிலும் அமையுமாறு கர்நாடகா மாநிலம் தன்னுடைய முதல் நீர்நாய் பாதுகாப்பு காப்பகம் (first otter conservation reserve) ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
  • யுனெஸ்கோவின் புராதன பாரம்பரிய இடமான ஹம்பியின் வழியேயும் இந்த நீர்நாய் பாதுகாப்பு இருப்பு அமைந்துள்ளது.
  • மஷீர் மீன்கள் (Masheer Fish), நன்னீர் முதலைகள் மற்றும் பெரிய மென் ஓட்டு ஆமைகள் (giant soft shelled turtles), ஆற்று நீர்நாய்கள் (Smooth Coated otters), காட்டு நீர்நாய்கள் (Smooth Clawed Otters) ஆகியவை இந்த பாதுகாப்பு காப்பகத்தில் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளன.
  • ஆற்று நீர்நாய்களானது இந்தியாவில் நாடு முழுவதும் இமாலயம் முதல் தென்னிந்தியா வரை காணப்படுகின்றன.
  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்பு பட்டியல் படி, ஆற்று நீர்நாய்கள் பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) விலங்கினமாகும்.
  • மேலும் நீர் நாய்களின் பாதுகாப்பிற்காக காட்டு நீர் நாய் மற்றும் ஆற்று நீர் நாய் ஆகியவை முறையே இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் அட்டவணை I மற்றும் அட்டவணை II-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • வாழிட இழப்பு, இழுவை வலை மூலமாக மிதமிஞ்சிய மீன் பிடிப்பு (overfishing by trawlers), வேட்டையாடுதல், டைனமைட் மீன்பிடிப்பு (dynamite fishing) ஆகியவை காரணமாக நீர்நாய்கள் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றன.
  • மேலும் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளின் பெருக்கமும் இவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்