TNPSC Thervupettagam

துங்கரேஷ்வர் வனவிலங்கு சரணாலயம்

December 10 , 2022 721 days 407 0
  • மஹாராஷ்டிராவின் துங்கரேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியைச் சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்ற விதிமுறையில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்து உள்ளது.
  • இது மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசை மற்றும் விரார் ஆகியவற்றிற்குக் கிழக்கே உள்ள ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது.
  • இது போரிவலி தேசியப் பூங்காவிற்கும் தன்சா வனவிலங்கு சரணாலயத்திற்கும் இடையே ஒரு வழித்தடத்தினை உருவாக்குகிறது.
  • முன்னதாக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட காடுகள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவை அவற்றின் வரையறுக்கப் பட்ட எல்லைகளில் இருந்து குறைந்தபட்சம் 1 கி.மீ. சுற்றளவில் கட்டாயமாக ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை அமைத்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் என்பது பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளைச் சுற்றி "தாக்கத்தினைத் தடுக்கும் அரண்களாக" அமைக்கப்படும் பகுதிகளாகும்.
  • அதிகப் பாதுகாப்பு உள்ள பகுதிகளிலிருந்து குறைந்தப் பாதுகாப்பு உள்ள பகுதிகள் என அனைத்து வனப் பகுதிகளுக்கும் அவை ஒரு மாறுதல் மண்டலமாக செயல்படுகின்றன.
  • இதற்கு முன்பாக மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா மற்றும் தானே க்ரீக் ஃபிளமிங்கோ (பூநாரை) சரணாலயம் ஆகியவற்றிற்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்