‘யாங்சி ஆற்றின் பாண்டா’ என்று அழைக்கப்படும் சீன நாட்டின் மாபெரும் துடுப்பு மீன் இனங்கள் அழிந்து விட்டதாக சீனா அறிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக அதிகப்படியான மீன்பிடித்தல் காரணமாக இந்த இனங்களின் அழிவு ஏற்பட்டுள்ளது.
யாங்சி நதி மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கூற்றுப் படி, 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்திலேயே இந்த மீன் இனம் அழிந்து விட்டது.
செஃபுரஸ் கிளாடியஸ் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்தத் துடுப்பு மீன் இனமானது 22 அடி (7 மீட்டர்) நீளம் வரை வளரக் கூடியது.
இந்த மீன் இனம் கடைசியாக 2003 ஆம் ஆண்டில் காணப்பட்டது.