TNPSC Thervupettagam

துணை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்

July 7 , 2023 362 days 416 0
  • துணை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக துஷார் மேத்தா மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞருக்கு அடுத்தபடியாக இரண்டாவது உயர் நிலைச் சட்ட அதிகாரி என்பவர் துணை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார்.
  • உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஆறு கூடுதல் துணை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்களும் நியமிக்கப்பட்டனர்.
  • மேத்தா 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் துணை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக தொடர்ந்து பணியாற்றுகிறார்.
  • இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.
  • மூத்த வழக்கறிஞர் R .வெங்கடரமணி கடந்த ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப் பட்டதோடு மேலும் இவர் 2025 ஆம் ஆண்டு வரை மொத்தம் மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்