நியமனங்களுக்கான அமைச்சரவை குழு இரண்டாண்டு காலத்திற்கு துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சரணின் நியமனத்திற்கு ஒப்புதலளித்துள்ளது.
சரண் தற்சமயம் ரஷ்யாவிற்கான இந்தியாவின் தூதராக உள்ளார்.
உளவுத் துறையின் முன்னாள் தலைவர் அஜித் தோவல் தற்சமயம் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார்.
NSA (National Security Advisor) தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைமை நிர்வாகி. இவர் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் பிரதம மந்திரிக்கு முதன்மை ஆலோகராகவும், யுக்திசார்ந்த விஷயங்களை மேற்பார்வையிடுபவராகவும் உள்ளார்.
புலனாய்வுத் துறைகளான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவும் (Research and Analysis Wing) உளவுத்துறையும் (Intelligence Bureau) பிரதமருக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்காமல் NSAவிடமே அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றன.
1998ம் ஆண்டு நவம்பரில் NSA என்கின்ற பதவி அடல் பிகாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது. பிரஜேஸ் மிஸ்ரா இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.
இந்த பதவி ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இதுவரையில் நியமிக்கப்பட்ட எல்லா தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் இந்திய வெளியுறவுத் துறை பணியைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் MK நாராயணனும் அஜித் தோவலும் இந்திய காவல்துறை பணியைச் சேர்ந்தவர்களாவர்.