TNPSC Thervupettagam

துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

June 2 , 2018 2372 days 1271 0
  • நியமனங்களுக்கான அமைச்சரவை குழு இரண்டாண்டு காலத்திற்கு துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சரணின் நியமனத்திற்கு ஒப்புதலளித்துள்ளது.
  • சரண் தற்சமயம் ரஷ்யாவிற்கான இந்தியாவின் தூதராக உள்ளார்.
  • உளவுத் துறையின் முன்னாள் தலைவர் அஜித் தோவல் தற்சமயம் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார்.

  • NSA (National Security Advisor) தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைமை நிர்வாகி. இவர் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் பிரதம மந்திரிக்கு முதன்மை ஆலோகராகவும், யுக்திசார்ந்த விஷயங்களை மேற்பார்வையிடுபவராகவும் உள்ளார்.
  • புலனாய்வுத் துறைகளான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவும் (Research and Analysis Wing) உளவுத்துறையும் (Intelligence Bureau) பிரதமருக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்காமல் NSAவிடமே அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றன.
  • 1998ம் ஆண்டு நவம்பரில் NSA என்கின்ற பதவி அடல் பிகாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது. பிரஜேஸ் மிஸ்ரா இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.
  • இந்த பதவி ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இதுவரையில் நியமிக்கப்பட்ட எல்லா தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் இந்திய வெளியுறவுத் துறை பணியைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் MK நாராயணனும் அஜித் தோவலும் இந்திய காவல்துறை பணியைச் சேர்ந்தவர்களாவர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்