தமிழக ஆளுநர் அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேடல் குழு தொடர்பான அறிவிப்பை திரும்பப் பெறுமாறு மாநில அரசிடம் கோரியுள்ளார்.
இது பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பரிந்துரைக்கப்பட்ட நபரைச் உள்ளடக்கியதாக இல்லை என்றும், மேலும் அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதாகவும் ஆளுநர் கூறினார்.
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களின் சட்டங்களின் படி, தேடல் குழுக்கள் வேந்தர் -ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நபர், அரசினால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நபர் மற்றும் ஆட்சி மன்றம் அல்லது அதன் செனட் அல்லது அதன் மேலவையினால் பரிந்துரைக்கப்பட்டஒரு நபர் என மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
13 மாநிலப் பல்கலைக்கழகங்களுள் ஆறு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களின் நீட்டிக்கப்பட்ட பதவிக் காலமானது பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் முடிவடைகிறது.
உச்ச நீதிமன்றம் ஆனது, ‘ஜெகதீஷ் பிரசாத் சர்மா எதிர் பீகார் அரசு’ இடையிலான வழக்கில், மாநில அரசுகள் ஆனது UGC குழுவின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றத் தேவையில்லை என்றும், அவை எந்த விதிகளை வேண்டுமானாலும் அதன் விருப்பம் போல ஏற்கலாம் என்றும் கூறியுள்ளது.