TNPSC Thervupettagam

துணைக் குடியரசுத் தலைவருக்கு “ஆர்டர் ஆஃப் கிரீன் கிரசெண்ட்” விருது

October 12 , 2019 1752 days 655 0
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான எம்.வெங்கையா நாயுடு ஆப்பிரிக்கத் தீவு தேசமான கொமொரோஸின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான “ஆர்டர் ஆஃப் கிரீன் கிரசெண்ட்” என்ற விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்த விருதானது மோரோனியில் அந்நாட்டு அதிபரான அசாலி அசாமவுனியால் இவருக்கு வழங்கப்பட்டது.
  • மோரோனி நகரம் ஆனது ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள  கொமொரோஸ் தீவுக் கூட்டத்தின் தலைநகரம் ஆகும்.
  • 2017 ஆம் ஆண்டில் வெங்கையா நாயுடு துணைக் குடியரசுத் தலைவரான பிறகு இது அவருக்கு கிடைத்த இரண்டாவது சர்வதேச கௌரவமாகும்.
  • இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கோஸ்டாரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி பல்கலைக் கழகமானது நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக நிலையான வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு ஒரு கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கியது.
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சியரா லியோன் மற்றும் கொமொரோஸின் அரசு முறை சுற்றுப் பயணத்தில் தற்போது  உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்