TNPSC Thervupettagam

துணைக் கோளை உருவாக்கும் பகுதி

July 31 , 2021 1122 days 577 0
  • புவியிலிருந்து 370 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஆரஞ்சு வண்ணத்திலான PDS 70 எனப்படும் இளம் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் இரு புறக்கோள்களில் ஒன்றை (PDS 70c) சுற்றி ஒரு துணைக் கோளை உருவாக்கும் பகுதி இருப்பதை அறிவியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
  • புறக்கோள்கள் என்பவை நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே அமைந்திருக்கும் கோள்களாகும்.
  • சிலியிலுள்ள ALMA என்ற ஆய்வகமானது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் இரு புறக்கோள்களுள் ஒன்றைச் சுற்றி, வான் பொருட்களை ஒன்றுச் சேர்க்கும் ஒரு சுழலும் வட்டினைக் கண்டறிந்துள்ளது.
  • இது துணைக்கோள்கள் உருவாகின்ற ஒரு வட்டப்பகுதி வடிவிலான தட்டு என அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்