துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் இல்லை - SC
July 7 , 2018 2337 days 681 0
துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்குத் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
துணைநிலை ஆளுநர் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைப்படி முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. துணைநிலை ஆளுநர் ‘தடுப்பாளராக‘ செயல்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியின் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
நிலம், பொது அமைதி மற்றும் காவல்துறை ஆகிய மூன்று துறைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளின் மீதும் சட்டம் இயற்ற மற்றும் நிர்வாகம் நடத்த டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.