TNPSC Thervupettagam

துத்வா புலிகள் காப்பகத்திற்கு SSB ரோந்து

November 27 , 2018 2250 days 772 0
  • துத்வா புலிகள் காப்பகம் மற்றும் சசஸ்திரா சீமா பால் (Sashastra Seema Bal - SSB) ஆகியவை துத்வா வனப் பகுதி மற்றும் அதன் வளமான வன உயிர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கென கை கோர்த்துள்ளன.
  • வனப் பகுதிகள் மற்றும் வனவிலங்கு குற்றங்களைத் தடுப்பதற்காக துத்வா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்துப் பணியை வலுப்படுத்துவதற்காக எல்லைப் பாதுகாப்பில் உள்ள SSB உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படைகள் மற்றும் துத்வா களப் பணியாளர்கள் ஆகியோரிடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
  • துத்வா புலிகள் காப்பகமானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மற்றும் பஹ்ராய்ச் மாவட்டங்களின் குறுக்காக அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்.
  • இது துத்வா தேசியப் பூங்கா, கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் காடர்நியாகாட் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்