TNPSC Thervupettagam

துப்பாக்கி சுடுதல் – உலகக் கோப்பை

March 31 , 2021 1208 days 629 0
  • ISSF உலகக் கோப்பைப் போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு பிரிவிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
  • பெண்கள் குழுப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிரேயாசி சிங், மனிஷா கீர் மற்றும் இராஜேஷ்வரி குமாரி ஆகிய மூவர் இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
  • ஆண்களுக்கான குழுப் போட்டியில் ஸ்லோவாக்கியா அணியை வீழ்த்தி, கெய்னன் செனாய், பிரித்விராஜ் தொண்டைமான் மற்றும் லக்சாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
  • மொத்தமாக 30 பதக்கங்களை வென்று இந்தியா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவையடுத்து 8 பதக்கங்களுடன் ஐக்கிய அமெரிக்க நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பிரித்விராஜ் தொண்டைமான்

  • தமிழ்நாட்டைச்  சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் புதுதில்லியில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைப் போட்டியின் கடைசி நாளில் ஆண்களுக்கான குழுப் போட்டியில் இந்தியா தங்கம் வெல்லுவதற்கு உதவினார்.
  • அவர் கெய்னன் செனாய் மற்றும் லக்சாய் சயோரன் ஆகியோருடன் அணி சேர்ந்து பங்கேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்