தமிழக அரசானது, துப்புரவுப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடங்கி உள்ளது.
இது மாநிலத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, துப்புரவுப் பணியாளர்களை அடையாளம் காணவும், அவர்களின் எண்ணிக்கையினைக் கணக்கெடுப்பதற்காகவும் ஒரு கைபேசி செயலி வெளியிடப் பட்டது.
துப்புரவுப் பணியாளர்களைக் கண்டறிவதற்கான ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப் பட்டு, அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் இந்தச் செயலியில் பதிவேற்றப்படும்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமானது, மாநிலத்தில் உள்ள ஐந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
பின்னர் இது மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப் படும்.