துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகன் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.
அவர் ஏற்கனவே துருக்கிக் குடியரசின் ஸ்தாபகர் முஸ்தபா கெமால் அடாதுர்க்கின் 15 ஆண்டு அதிபர் பதவிக் காலத்தினை விஞ்சியுள்ளார்.
சில உத்தியோகப் பூர்வத் தரவுகளின்படி, துருக்கியின் பணவீக்கம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 85.6 சதவீதமாக இருந்த நிலையில் அது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 50.5 சதவீதமாக இருந்தது.