TNPSC Thervupettagam

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளைத் தாக்கிய மாபெரும் நிலநடுக்கம்

February 11 , 2023 527 days 232 0
  • பிப்ரவரி 06 ஆம் தேதியன்று, துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் 3,800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு ஆயிரக் கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாயின.
  • ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான முதல் நிலநடுக்கம் ஆனது துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தின் பசார்சிக் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தது.
  • அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாகவே, அதே பகுதியில் 7.6 ரிக்டர் என்ற அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் மாபெரும் நிலநடுக்கமாக கருதப் படுகிறது.
  • துருக்கி நாடானது, உலகிலேயே அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படக் கூடிய மண்டலங்களில் அமைந்த நாடுகளுள் ஒன்றாகும்.
  • அந்நாட்டில் கடைசியாக 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆனது 1939 ஆம் ஆண்டில் கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் ஏற்பட்டு அதில் 33,000 பேர் உயிரிழந்தனர்.
  • 1999 ஆம் ஆண்டில், துருக்கிய நாட்டின் டஸ் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டு அதில் 17,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்