TNPSC Thervupettagam

துருப்பிடிக்காத இரும்பு இறக்குமதியின் மீது எதிர்குவிப்பு தடுப்பு வரி

October 27 , 2017 2457 days 1158 0
  • துருப்பிடிக்கா சில குளிர் உருளை எஃகு தயாரிப்புகள் மீது சீனா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்வதை தடுக்கும் பொருட்டு எதிர் குவிப்பு தடுப்பு வரியினை (Anti-Dumping Duties), உள்ளூர் தயாரிப்பாளர்களை கருத்தில் கொண்டு, இந்தியா சுமத்தியுள்ளது.
  • இந்த புதிய வரி விதிப்பு, 10-டிசம்பர்-2020 வரை நடைமுறையில் இருக்கும். சில ரக துருப்பிடிக்காத இரும்பிற்கு வரிவிலக்கு உண்டு.
  • வெப்ப உருளை மற்றும் குளிர் உருளை துருப்பிடிக்காத எஃகு தயாரிப்புகளின் மீது கடந்த மாதம் அரசு கூடுதலாக95% ஈடுசெய் வரியினை விதித்துள்ளது. இதுவே இரும்புத் தயாரிப்புகளின் மீதான முதலாவது வரிவிதிப்பாகும்.
ஈடுசெய் வரி (Countervailing Duty)
  • இது ஓர் கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பாகும். இது ஏற்றுமதி செய்யும் நாட்டில் அப்பொருள்கள் ஏற்றுமதி மானியங்கள் மற்றும் வரிவிலக்குகள் பெற்றிருப்பின், அதன் மீது இறக்குமதி செய்யப்படும் நாட்டினால் வரி விதிக்கப்படுகிறது.
எதிர்குவிப்பு தடுப்பு வரி (Anti-Dumping Duty)
  • எதிர் குவிப்பு தடுப்பு வரி என்பது, உள்நாட்டு அரசினால் விதிக்கப்படும் ஓர் பாதுகாப்பு வரியாகும். இதன் மூலம் நியாயமான சந்தைவிலை நிர்ணயிக்கப்படும் என நம்பப்படுகிறது.
  • குவித்தல் என்பது பொதுவாக ஏற்றுமதி செய்யும் நாடு, சரக்குகளை இறக்குமதி செய்யும் நாட்டின் சந்தை விலையைவிட மிகக் குறைந்த விலைக்கு சரக்குகளை தருவதாகும்.
  • உள்ளூர் சந்தைகளை பாதுகாக்க, பல்வேறு நாடுகள் எதிர் குவிப்புத் தடுப்பு வரியினை விதித்துள்ளன. அவற்றின் மூலம் சொந்த நாடுகளின் தேசியச் சந்தைகள் காக்கப்படும் என நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்