TNPSC Thervupettagam

துருவ அறிவியல் ஒத்துழைப்பு

January 10 , 2020 1688 days 656 0
  • இந்தியாவின் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் மற்றும் சுவீடனின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம் ஆகியவை துருவ அறிவியல் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்த இரு நாடுகளின் முதலாவது கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பிராந்தியங்களில் உள்ள நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் உள்ளடக்கியுள்ளதால் இதற்கு துருவ அறிவியல் என்று பெயர்.
  • ஆர்க்டிக் ஆணையத்தில் உள்ள எட்டு உறுப்பு நாடுகளில் ஸ்வீடனும் ஒன்றாகும். அதே சமயத்தில் ஆர்க்டிக் ஆணையத்தில் இந்தியா பார்வையாளர் நிலையைக் கொண்டுள்ளது.
  • இதே போல் இந்தியாவும் துருவப் பிராந்தியங்களிலும் கடல் பகுதியிலும் அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களைத் நடத்திக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்