TNPSC Thervupettagam

துருவக் கரடிகள் எண்ணிக்கை சரிவு

December 27 , 2022 704 days 441 0
  • கனடாவில் மேற்கு ஹட்சன் விரிகுடாவில் துருவக் கரடிகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 27 சதவீதம் குறைந்துள்ளது.
  • ரஷ்யா, அலாஸ்கா, நார்வே, கிரீன்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 19 துருவக் கரடி வகைகள் உள்ளன.
  • மேற்கு ஹட்சன் விரிகுடாவில் உள்ள துருவ கரடி இனம் முதலாவதாக அழிந்து போகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2011 முதல் 2016 வரை மட்டும் இந்தப் பகுதியில் துருவக் கரடிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்துள்ளது.
  • தற்போது 2021 ஆம் ஆண்டில் 618 துருவக் கரடிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
  • இது 1980 ஆம் ஆண்டுகளின் எண்ணிக்கை புள்ளி விபரங்களை விட தோராயமாக 50 சதவீதம் குறைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்