அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது துரோணகிரி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இது 2022 ஆம் ஆண்டு தேசியப் புவியியல் (இடஞ்சார்ந்த) கொள்கையின் கீழான ஒரு சோதனைத் திட்டமாகும்.
குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் வணிகம் செய்வதை நன்கு எளிதாக்குவதிலும் புவிசார் தொழில்நுட்பங்கள் மற்றும் பல புத்தாக்கங்களின் மீதான சாத்தியமான பயன்பாடுகளை எடுத்துக் காட்டுவதை இது ஓர் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
வேளாண்மை, வாழ்வாதாரம், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முதல் கட்ட நடவடிக்கையானது உத்தரப் பிரதேசம், ஹரியானா, அசாம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய சில மாநிலங்களில் மேற் கொள்ளப் பட உள்ளது.