துரோணாச்சாரியா மற்றும் தயான்சந்த் விருதுகள் - தேர்வுக் குழு
September 13 , 2018 2270 days 668 0
இந்த ஆண்டிற்கான துரோணாச்சாரியா மற்றும் தயான்சந்த் விருதுகள் பெறுவோரை தேர்வு செய்வதற்கான 11 பேர் கொண்ட தேர்வுக் குழுவின் தலைவராக நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
தயான்சந்த் விருது விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனை படைத்தவர்கள் மற்றும் பங்களிப்பை ஏற்படுத்திய சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது விளையாடிக் கொண்டிருக்கும் போதும் ஓய்வு பெற்ற பின்பும் வழங்கப்படும்.
துரோணாச்சாரியா விருது நான்கு ஆண்டு காலகட்டத்தில் சிறப்பான மற்றும் தகுதி வாய்ந்த பணிக்காக பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.