துர்கானா ஏரி குறித்த ஆய்வு
August 17 , 2024
98 days
148
- 50 ஆண்டுகளில் முதல் முறையாக துர்கானா ஏரியின் விரிவான ஆய்வு ஆனது நடத்தப் பட்டுள்ளது.
- இது கென்யாவின் தொலைதூர வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
- துர்கானா ஏரி ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய ஏரியாகவும், உலகின் மிகப்பெரிய நிரந்தரப் பாலைவன ஏரியாகவும் உள்ளது.
- இந்த யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமானது அதன் தனித்துவமான பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றது.
- ஓமோ ஆற்றில் இருந்து வரும் பருவகால வெள்ளம் ஆனது, அதன் நீர் வரத்தினை விட 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
- இந்த ஏரியில் 12 உள்நாட்டு வகைகள் உட்பட 79 மீன் இனங்கள் உள்ளன என்பதோடு இங்கு நைல் முதலைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
- கடைசியாக 1974 ஆம் ஆண்டில் ஹாப்சன் என்பவரால் ஏரியின் பரவலான நீரியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Post Views:
148