புதிய வாராந்திர (weekly) துர்க் பெரோஸ்பூர் – துர்க் அந்தோதயா எக்ஸ்பிரஸ் (Durg-Ferozpur-Durg Antyodaya Express) தென்கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் (South East Central Railway -SECR zone) கீழ் சத்திஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள ராய்ப்பூர் இரயில் நிலையத்தில் துவங்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்து வசதிகளும் பொருந்திய பயணத்தை உறுதி செய்வதற்காக இந்த அந்தோதயா எக்ஸ்பிரஸ் (Antyodaya Express) தொடங்கப்பட்டுள்ளது.
உயர் போக்குவரத்து அடர்த்தி உடைய இரயில் வழிப் பாதைகளில் (on high dense train traffic routes) சாதாரண குடிமக்களுக்கு முன்பதிவு இல்லாத (Antyodaya Express) மற்றும் அதிவேக இரயில் சேவை வழங்குவதற்காக அந்தோதயா எக்ஸ்பிரஸ் துவங்கப்பட்டுள்ளது.
இந்த அந்தோதயா எக்ஸ்பிரஸ் அல்லாது, பிற இரு அந்தோதயா எக்ஸ்பிரஸ்களான, கொத்கத்தா – பிலாஸ்பூர் – புனே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜபல்பூர் – பிலாஸ்பூர் – கல்கத்தா ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ஆகியவையும் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.