லெபனானில், சுமார் 125 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஆம்பரில் (மரப்பிசின்) கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய வகை கொசு குறித்து பழங்கால ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர்.
இந்தப் புதிய இனங்களின் ஆண் கொசுக்களில் எதிர்பாராதவிதமாக கூர்மையான தாடைகளுடன் கூடிய துளையிடும் வாய்ப்பகுதிகள் கொண்டு காணப்படுகின்றன என்ற நிலையில் அவை இரத்த உறிஞ்சுக் குழாய்களாக இருக்கக் கூடும்.
கடந்த காலத்தில் ஆண் கொசுக்களும் இரத்தத்தை உட்கொண்டதாக அது தெரிவிக்கிறது.
இந்தப் புதிய மாதிரிகள் ஆனது லிபனோகுலெக்ஸ் இன்டர்மீடியஸ் என்ற புதிய வகை கொசுக்களைக் குறிக்கின்றன.
கொசுக்கள் ஆனது குலிசிடே குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 3,600 வகையான சிறிய ஈக்கள் இனமாகும்.
பெண் கொசுக்கள் ஆனது, மிகவும் மோசமான ஹெமாட்டோபாகஸ் (இரத்த உண்ணி) பூச்சிகளில் ஒன்றாகும் என்பதோடு இவை சில நேரங்களில் கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும்.