துவக்க நிறுவனங்களுக்கு மிகப் பெருமளவில் நிவாரணம் அளித்திடும் வகையில் துவக்க நிறுவனங்களுக்கான ஏஞ்சல் வரி விதிமுறைகளைத் தளர்த்திட அரசு முடிவெடுத்து இருக்கின்றது.
வருமானவரிச் சலுகைகளை துவக்க நிறுவனங்கள் பெற்றிட முதலீட்டு வரம்பு 10 கோடியிலிருந்து 25 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
முந்தைய 7 வருடங்கள் என்ற அளவிலிருந்து துவக்க நிறுவனத்திற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு தற்போது அது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 10 வருட காலத்திற்கு துவக்க நிறுவனமாகக் கருதப்படும்.
ஒரு துவக்க நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் முன்பிருந்த 25 கோடிக்குப் பதிலாக 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு துவக்க நிறுவனம் என்ற பிரிவாகக் கருதப்படுகின்றது.