தூசிப் படலங்களுக்கான பல்கோண ஆய்வகத்தினை (Multi-Angle Imager for Aerosols missions) உருவாக்கி, விண்ணில் ஏவும் ஒரு திட்டத்திற்காக இத்தாலிய விண்வெளி முகமையான ASI உடன் நாசா கைகோர்த்துள்ளது.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் நிலவும் காற்று மாசு பாட்டினால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டு ஆய்வுப் பணியானது ஆய்வு மேற்கொள்ளும்.
MAIA ஆய்வகம் ஆனது PLATiNO-2 என்ற செயற்கைக் கோளைக் கொண்டிருக்கும்.
இது ஆய்வகம், நிலப்பரப்பில் உள்ள உணர்விகள் மற்றும் வளிமண்டல மாதிரிகள் ஆகியவற்றிலிருந்துத் தரவைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்யும்.