அதிகரித்து வரும் வைட்டமின் D குறைபாடுகளைக் (Vitamin D deficiencies-VDD) களைவதற்காக குறிப்பாக இளம் மக்களிடையே வைட்டமின் D குறைபாட்டைக் குறைப்பதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமானது (FSSAI- Food Safety and Standards Authority of India- FSSAI) வெயில் எனும் திட்டத்தைத் (Project Dhoop) துவங்கியுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT- National Council of Educational Research and Training) மற்றும் புது தில்லி மாநகராட்சிக் கழகம் (New Delhi Municipal Council-NDMC) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தால் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இயற்கையான சூரிய ஒளி வெளிச்சத்தின் மூலம் மாணவர்கள் அதிகபட்ச அளவில் விட்டமின் D-ஐப் பெறுவதனை உறுதி செய்வதற்காக, தங்களது காலை பள்ளிக் கூடுகையை (Morning assembly) மதிய நேரத்தில் முக்கியமாக 11 மணி முதல் 1 மணிக்கு இடைப்பட்ட நேரத்திற்கு மாற்ற பள்ளிகளை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
FSSAI
உணவுப் பாதுகாப்பின் மேற்பார்வை மற்றும் ஒழுங்கு முறையின் மூலம் இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் பொறுப்புடைமை கொண்ட முதன்மை சட்ட அமைப்பே (nodal statutory agency) இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமாகும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ன் (Food Safety and Standards Act, 2006) கீழ் இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் (Union Ministry of Health & Family Welfare) கீழ் FSSAI செயல்படுகின்றது.