இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தங்களது தூய ஆற்றல் மற்றும் பருவநிலைக் கூட்டிணைவை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல ஒப்புக் கொண்டு உள்ளன.
2016 ஆம் ஆண்டு இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தூய ஆற்றல் மற்றும் பருவநிலைக் கூட்டிணைவினைச் செயல்படுத்துவதற்காக 2023 ஆம் ஆண்டு வரையிலான ஒரு விரிவான செயல்திட்டத்திற்கு அவை இணைந்து ஒப்புதல் அளித்தன.
சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவின் பின்னணியில் இந்திய-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூடுதல் வழிகளை ஆராயவும் இந்தக் குழு ஒப்புக் கொண்டது.