தகவல் தொடர்பிற்கு தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் மக்களை ஊக்குவிப்பதற்காக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநரகமானது இந்த விருதை அறிவித்துள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான சி. மணிகண்டன், புதுச்சேரியைச் சேர்ந்த ஆர். ஹரிதாஸ் மற்றும் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான டி. ஆரோக்கிய ஆலிவர் ராஜ் ஆகியோர் இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.