TNPSC Thervupettagam

தூய்மை/ பசுமை வழி தாவரங்கள் திட்டம் 2024

August 20 , 2024 98 days 130 0
  • மத்திய அமைச்சரவையானது பசுமை வழி தாவரங்கள் (Clean Plant) திட்டத்திற்கு (CPP) ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது இந்தியாவில் தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • நாடு முழுவதும் உள்ள பழப் பயிர்களின் தரத்தை உயர்த்துவதையும் CPP இலக்காகக் கொண்டுள்ளது.
  • பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், வருமான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வைரஸ் தொற்று இல்லாத, உயர்தர நடவுப் பொருட்களைப் பெற விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது.
  • பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 2013-14 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை 24 மில்லியன் ஹெக்டேராக இருந்த தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பானது 28.63 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
  • 277.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி என்பது தற்போது 352 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
  • இந்தியா புதிய (செயல்முறைக்கு உட்படுத்தாத) பழங்களை அதிகளவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உள்ளது.
  • 2023-24 ஆம் நிதியாண்டில், இந்தியா சுமார் 1.15 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய பழங்களை ஏற்றுமதி செய்தது அதே நேரத்தில் சுமார் 2.73 பில்லியன் டாலர் மதிப்புள்ள பழங்களை இறக்குமதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்