தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் இரண்டாம் நிலை
March 20 , 2020
1866 days
755
- தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் இரண்டாம் நிலையை 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தத் திட்டமானது அதன் இரண்டாம் நிலையின் போது இரண்டு கோடி திட்டங்களின் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.
- இது திறந்தவெளிக் கழிப்பிடமற்ற நிலை - பிளஸ் மற்றும் திட & திரவக் கழிவு மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
- இந்த நிலையின் போது, கிராமப் பஞ்சாயத்துகளில் தீவிர கவனம் செலுத்தப்பட இருக்கின்றது.
- இந்தக் கிராமப் பஞ்சாயத்துகள் 15வது நிதி ஆணையத்தின் கீழ் அதிக நிதியுதவியைப் பெற இருக்கின்றன.
- தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் ரூ. 7 முதல் ரூ. 20 லட்சம் வரை நிதி கிடைக்கும்.
- இந்த நிதியானது திட மற்றும் திரவக் கழிவுகளை நிர்வகிப்பதற்காக 5 லட்சம் என்ற அளவில் அதிகரிக்கப்பட இருக்கின்றது.
- இந்த கூடுதல் நிதியானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட உள்ளது.
- இதன் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் பணிக் குழுவானது தூய்மை இந்தியா என்ற திட்டத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கின்றது.
- தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் இரண்டாம் நிலையானது 2020-21 முதல் 2024-25 வரை செயல்படுத்தப்பட உள்ளது.
Post Views:
755