மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், சுற்றுச்சூழல் சுகாதார நிலையம் மற்றும் டாடா அறக்கட்டளை ஆகியவை இணைந்து புது தில்லியில் ஒரு துப்புரவு பூங்காவை அமைத்துள்ளன.
சுகாதாரத் துறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பூங்காவானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவானது கழிப்பறை தொழில்நுட்பங்கள், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்கள் போன்றவற்றை சுருக்கமான விளக்கங்களுடன் காட்சிப் படுத்துகின்றது.