நகர்ப்புற பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் குறிக்கோளினை அடைவதற்காக பங்காற்றியவர்களுக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தால் தூய்மை இந்தியா விருதுகள் ( Swacchhata Bharath Awards ) தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டின் தொடக்க நாளான அக்டோபர் 2 அன்று வழங்கப்பட்டுள்ளன.
ஏழு பிரிவுகளின் கீழ் 20 விருதுகள் தனிநபர்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருதினைப் பெற்றவர்கள்
'My Delhi Keep It Clean’ எனும் டெல்லியை சேர்ந்த முகநூல் குழுவிற்கு பொது இடங்களில் தூய்மையை பேணுவதற்கான முயற்சிகளை ஊக்குவித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி திடக் கழிவுகளில் இருந்து உரங்களை தயாரித்து சந்தைப்படுத்தியதற்காக KRIBHCO எனும் உர கூட்டுறவுச் சங்கத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மத அமைப்பு வகைகளின் கீழ், சிக்கிமில் உள்ள பேமாயங்ஸ்டே மடாலாயத்திற்கு கழிவுகளற்ற நிறுவனமாக (Zero-waste institution) இருப்பதன் பொருட்டு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவி குழுக்களுக்கான பிரிவில் , பெண்கள் மேம்பாடு மற்றும் வாழ்வாதார பெருக்கத்திற்கு குப்பைகளை வளமாக மாற்றி வரும் சுவச் அம்பிகாபூர் சஹாகாரி சமிதி எனும் சுய உதவி குழுவிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிரிவில் அம்பிகரில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா அவாசியா வித்யாலயா பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.