TNPSC Thervupettagam

தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம்

October 10 , 2017 2474 days 1844 0
  • நமாமி கங்கா திட்டத்தின் கீழ் தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் (National Mission for Clean Ganga - NMCG) கங்கையை தூய்மைப்படுத்த  8 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • மாசுபாடு குறைப்பு நடவடிக்கைகள்,
    • கழிவுநீர் மேலாண்மை
    • உயிரிச் சீராக்கத் தொழில்நுட்பம் மூலம் வடிகால்களை சுத்திகரித்தல்
    • மாசுபாடுகளை கண்டறிதல், மதிப்பிடல் மற்றும் கண்காணிப்புத் திட்டம்
போன்றவற்றோடு தொடர்புடைய எட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் (National Mission for Clean Ganga)
  • இது கங்கை ஆற்றின் புத்துயிர், பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான தேசிய குழுமத்தின்  (National Council for Rejuvenation, Protection and Management of River Ganga) செயல்பாட்டு பிரிவாகும்.
  • தேசிய கங்கை ஆணையம் எனவும் அழைக்கப்படும் இந்த குழுமம் 1986 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் [Environment (Protection) Act (EPA),1986] கீழ் அமைக்கப்பட்டது.
  • இந்த அமைப்பு மத்திய நீர்வளம், நதி மேம்பாடு  மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
  • இந்த தேசிய இயக்கமானது சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860-ன் கீழ் 2011-ல் ஓர் பதிவு செய்யப்பட்ட சங்கமாக உருவாக்கப்பட்டது.
  • இது ஆட்சிக் குழுமம் மற்றும் செயற்குழு என்று இரண்டு அடுக்கு நிர்வாக கட்டமைப்பை உடையது.
  • கங்கையையும் அதன் துணை நதிகளையும் தூய்மைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்