TNPSC Thervupettagam

தூய்மைக் கணக்கெடுப்பு

May 22 , 2018 2383 days 736 0
  • அரசினுடைய அண்மைய தூய்மைமிகு இடங்களுக்கான (cleanliness survey) கணக்கெடுப்பில், இந்தூர் நகரமானது நாட்டின் தூய்மையான நகரமாக (cleanest city) உருவாகியுள்ளது. இந்தூரைத் தொடர்ந்து இக்கணக்கெடுப்பில் போபால் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்கள் உள்ளன.

  • சுவச் சர்வேக்ஷான் 2018 (Swachh Survekshan 2018) எனும் பெயருடைய அரசின் இந்த தூய்மைக் கணக்கெடுப்பின் நோக்கம், நாட்டில் உள்ள நகரங்கள் முழுவதும் நிலவுகின்ற தூய்மையினுடைய அளவினை மதிப்பிடுவதாகும்.
  • இந்த கணக்கெடுப்பில் தூய்மைக்காகச் சிறந்த முறையில் செயலாற்றும் மாநிலமாக (best performing state) ஜார்க்கண்ட் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைத் தொடர்ந்த இடங்களில் மகாராஷ்டிரா மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • கடந்த ஆண்டிற்கான சுவச் சர்வேக்ஷான் பட்டியலிலும் இந்தூர் நகரமே முதலிடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு இக்கணக்கெடுப்பானது 430 இந்திய நகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இம்முறை சுமார் 4200 நகரங்களில் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்