TNPSC Thervupettagam

தூய்மைமிகு பிரதான இடம்- மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

October 2 , 2017 2673 days 933 0
  • தூய்மைமிகு  பிரதான   இடம்- மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
  • தூய்மை இந்தியா மூன்றாவது ஆண்டிற்கான துவக்க நாளான  அக்டோபர்  2  அன்று, தூய்மையே சேவை  திட்டத்தின் கீழ்  இந்தியாவின் சிறந்த தூய்மைமிகு பிரதான  இடமாக  மதுரை மீனாட்சி அம்மன்  கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தூய்மை பணிகளில் துரிதமான துப்புரவுச் செயல்முறைகளை (Swift Cleaning Process ) மேற்கொண்டதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை (Swachhta Hi-Seva) தொடக்கத்தின் கீழ் தூய்மைமிகு  பிரதான  இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
  • இது நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மீக, கலாச்சார இடங்கள் மற்றும் பிரதான இடங்களில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தூய்மைப்படுத்துதல் முயற்சியாகும்.
  • இது மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மற்றும் சுற்றுலா அமைச்சகம் போன்றவற்றின் ஒத்துழைப்போடு மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் இம்முன்னெடுப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்